×

பிரதமர், உள்துறை அமைச்சர்கள் என பாஜக தனது அனைத்து பலங்களையும் பயன்படுத்திய போதும் மக்கள் ஏமாறவில்லை: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

கர்நாடகா: கர்நாடகத்தில் நடைபெற்ற மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 36 மையங்களில் இன்று காலை நடைபெற்றது. அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 35 தொகுதிகளில் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 10 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் 113 இடங்களில் முன்னிலைவகித்துள்ளது.

மோசமான நிர்வாகத்திற்கு எதிராக கர்நாடக மக்கள் வாக்கு:

கர்நாடகத்தில் நடைபெற்ற மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். முதலமைச்சர் யார் என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே உருக்கமான பேட்டி

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே உருக்கமாக பேசினார். பிரதமர், உள்துறை அமைச்சர்கள் என பாஜக தனது அனைத்து பலங்களையும் பயன்படுத்திய போதும் மக்கள் ஏமாறவில்லை. காங்கிரஸ் தலைவராக கார்கே பொறுப்பேற்றபின் அவரது சொந்த மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்:

காங்கிரஸ் கட்சி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் எங்கள் ஆட்சி அமையும். பாஜக நிறுத்தி வைத்துள்ள நல்ல திட்டங்களை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம் என கார்கே உறுதியளித்தார். சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இணைந்து செயல்பட்டதால் வெற்றி சாத்தியமானது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி, ஊழலை மக்கள் தூக்கி எறிந்து விட்டதை காட்டுகிறது.

The post பிரதமர், உள்துறை அமைச்சர்கள் என பாஜக தனது அனைத்து பலங்களையும் பயன்படுத்திய போதும் மக்கள் ஏமாறவில்லை: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி appeared first on Dinakaran.

Tags : Malligarjune Karke ,Karnataka ,Malligarjuna Karke ,Mallikarjune Karke ,
× RELATED காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை